Skip to main content

Mohamed Nabi history

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 

ஞானத் திறவுகோல் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 

சிறு முன்னோட்டம் 

 nabikal nayagathin history in tamil ஆன்மீக பேரொளி மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபையிலோ, பொது இடத்திலோ நடந்து செல்லும் போது யாரும் அவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்தினால் அதை கடுமையாக கண்டித்தார்கள். 

ஏன் தெரியுமா அது? தனி மனிதனின் சுயமரியாதைக்கு களங்கம் என்று கருதியதால்தான், அப்பேர்ப்பட்ட மாமனிதரின் வாழ்க்கை, அற்புதத்தின் அற்புதம்.

நபிகள் பிறப்பு – nabikal nayagathin history in tamil

சவுதி அரேபியாவில் மக்கா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்த அப்துல்லாஹ் -ஆமினா தம்பதிகள் ஆவர். சில மாதங்களில் அப்துல்லாஹ் வியாபார நிமித்தமாக சிரியாவுக்கு சென்றார். 

அங்கிருந்து மக்கா திரும்புகையில் யத்ரிபி எனும் இடத்தில் தம் மைத்துனர் வீட்டில் வந்து தங்கினார். அங்கே அவர் நோயுற்று குணமாகாது இறைவனடி சேர்ந்தார். 

அவ்வூரிலேயே மரணம் ஏற்பட்டதால் நல்லடக்கம் செய்யப்பட்டார். அப்துல்லாஹ் கி.பி. 545 -ல் பிறந்து 571-ல் இறந்தார். 

அப்போது நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் ஆமினாஅன்னை வயிற்றில் எட்டு மாதச் சிசுவாக இருந்தார். .



பிறகு பத்து மாதங்கள் கழிந்ததும் யானை ஆண்டு, ரபீயுல் அவ்வல் திங்கள் 12-ம் நாள் கி.பி.571-ல் ஏப்ரல், 20, திங்கட்கிழமை அதிகாலையில் முழுமதி நிறைவான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். 

தந்தையை பார்த்திராத நபிகள் அவர்கள் தன்னுடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் சிறப்பான முறையில் அனைவர் முன்னிலையிலும் முஹம்மது என்று பெயர் சூட்டினார். 

அன்னை ஆமினா தன் மகனை அன்போடு அஹ்மது என்று அழைப்பார். முஹம்மதுக்கு ஆறு வயதாகும் போது தன் தாய் ஆமினா மீளா நோயுற்று இறந்தார். 

நபிகள் நாயகம் அவர்கள் அருமைத் தந்தையையும், அன்பு தாயும் இழந்த நின்ற அவலநிலையை என்னென்போம். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்த்து வந்தார்கள். 

சிறுவன் முஹம்மதுவுக்கு பன்னிரண்டு வயது ஆகும் போது அபூதாலிப் வியாபாரத்துக்காக சிரியா செல்ல நேர்ந்தது. பயண ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்ட அவர், தாமும் பெரிய தந்தையுடன் பிரயாணம் செய்யவேண்டும் என்று எண்ணினார். 

அவ்விருப்பத்தை நயமாக வெளியிட்டுக் காட்டினார். அதனை செவியுற்ற அபூதாலிப் தனது தம்பி மகனை தம்முடன் அழைத்து செல்ல முடிவெடுத்தார்.தன் தம்பி மகனுடன் கடிகா மக்கா வந்து சேர்ந்தார். இந்த வியாபாரத்தில் அபூதாலிபுக்கு எப்போதும் கிடைப்பதை விட அதிகமான இலாபம் கிடைத்தது.

 இளவல் நபி இளம்வயதிலேயே வாணிபம் செய்ய முற்பட்டு விட்டார். முஹம்மது சிறுவனாயிருந்த போது தம் பெரிய தந்தையின் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். 

பெரிய தந்தைக்கு ஒரு சுமையாக தான் இருக்கக் கூடாது என்பதற்காக மற்றவர்களின் ஆடுகளையும் கூலிக்கும் மேய்த்து வந்தார். இதனால் முறையாக கல்வி பெறும் வாய்ப்பை இழந்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள்  நற்பெயர் பெற்றார் 

nabigal nayagam history in tamil வாலிப வயதில் அவர்கள் நேர்மையுடன் நடந்து, சத்தியத்தை கடைப்பிடித்து, வாக்கு தவறாமல் இருந்து வந்தார். ஒழுக்கத்தின் உயர்குன்றாக அவர்களை மக்காவிலுள்ள மக்கள் அனைவரும் முஹம்மதுவை அல் அமீன் என்று சிறப்பு பெயரிட்டு அழைத்து வந்தனர். 

நபிகள் நாயகம் பதினாறு வயதில் இருக்கும் போது மக்கள் நலனுக்காக பரோபகாரக் காரியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

மக்காவில் சீர்திருத்த கருத்துக் கொண்ட இளைஞர்கள் ஒன்று நற்பணி மன்றத்தை தொடங்கினார்கள். அதில் அவரும் அங்கமாக திகழ்ந்து வந்தார். இருபத்தைந்து வயதில் வியாபாரத்தை கற்றுத் தேர்ந்தார். 

நபிகளின் திருமணம் – nabikal nayagathin history in tamil

மக்கா நகரிலேயே பெரும் செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்துவிளங்கிய நாற்பது வயதை எட்டிய கதீஜா நாச்சியார் அம்மையார் அவர்கள். 

இவர் முன்பு இரு கணவருக்கு வாழ்க்கைப்பட்டு விதவையானவர். எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், ஒரு பெண் தன் மொத்த செல்வத்தையும், மிகப் பெரிய வியாபாரத்தையும் நிர்வகிக்க ஆண் துணை இருந்தால் இன்னும் சிறப்பாக நடத்த முடியும். 

நபிகள் நாயகத்தின் (முகம்மது) நேர்மை, ஒழுக்கம் மற்றும் வியாபாரத்திறமை பற்றி கேள்விப்பட்ட அவரை விரும்பினார். 

கட்டிளங்காளையரான முஹம்மதுவின் நடை உடை பாவனை, மரியாதை, கம்பீரம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து கதீஜா தன் உள்ளத்தை பறிகொடுத்தார். 

முஹம்மதுவின் பெரிய தந்தை அபூதாலிபிடம் தெரிவித்து, அவரது ஆலோசனையை அனுமதியையும் வேண்டி நின்றார். அவரும் தம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து, திருமண ஒப்புதலை கூறினார். 

அப்போது முஹம்மதுவின் வயது 25, கதீஜாவுக்கு வயது 40. இத்திருமணத்தின் வாயிலாகப் செல்வ சீமாட்டியான கதீஜாவின் திரண்ட செல்வம் முஹம்மதுவின் ஆதிக்கத்தில் வந்தது. 

இதனால் ஏழைகள், ஆதரவற்றோர், இயலாததோருக்கு வழங்கித் தமது ஈகைத்தன்மை, தயாள குணம், இரக்கச் சிந்தனை ஆகியவை முஹம்மதுக்கு இருந்தது. 

அதே சமயத்தில் வியாபாரத்தில் தன்னுடைய திறமையை காட்டினார். நாற்பது வயது வரை சாதாரண மனிதராக வாழ்ந்து, வியாபாரியாகவும் திகழ்ந்து வந்தார்.

நபிகளின் ஆன்மீக திறவு

மக்காவில் விக்கிரக சிலைகளும், மனதுக்கு பிடிக்காத பழக்க வழக்கங்களும், நிறைய இருப்பதை கண்டார் முஹம்மது. 

மக்கள் அறியாமையில் இருப்பதையும், மூடப்பழக்க வழக்கங்களில் இருப்பதையும் அறிந்தார். ஒற்றுமையுடன் இருக்காமல் தேவையில்லாத சண்டை, வீண் வாக்கு வாதங்களில் மக்கள் ஈடுபடுவதை கண்டார். 

மது அருந்துவதும், பெண்களை காமபோக பொருளாக பார்ப்பதும், சூதாடுவதும், பந்தயம் விடுவதும், அரபு நாடு எங்கிலும் மக்கள் இந்த நிலையில் வாழ்க்கை ஓட்டி வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்தால், அவரது மனம் வேதனைப்பட்டது. 

அவருக்கு மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அதே சமயத்தில் மக்கள் நல்வழி பாதையில் செல்ல என்ன வழி என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு இறைதாகம் (ஆன்மீக பற்று) ஏற்படலாயிற்று. 

அதன்விளைவாக, மக்கா நகருக்கு வடகிழக்கே சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள ஹிரா என்னும் மலைகுகையை நோக்கி சென்று அதிலுள்ள குகை ஒன்றில் தனித்திருந்து இறைவனின் தியானத்திலும், சிந்தனையிலும் ஈடுபட்டு வந்தார். 

அதே சமயத்தில் நோன்பிருந்தும் தவம் மேற்கொண்டார். இல்லாமல் மனைவி கதீஜாவைவும், குழந்தைகளையும் அழைத்து செல்வதுண்டு. திருமணம் ஆன பின்னர் பத்து ஆண்டுகள் அக்குகைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகளின் ஓதல் பயிற்சி 

 nabikal nayagathin history in tamil இச்சமயத்தில் ரமளான் மாதமும் வந்தது. வழக்கம் போல் ஹிராக் குகைக்குக் சென்று நோன்பிருந்து கடுந் தவம் மேற்கொண்டார். அப்போது இருள் சூழ்ந்திருந்த அந்த குகையில் திடீரென ஒளிமயமாகக் காட்சியளித்தது. 

அதைத் தொடர்ந்து இடிமுழக்கமும் ஏற்பட்டது. அந்த ஒளினூடே, மிக பிரகாசமாக மனித உருவம் ஒன்று தோன்றி நின்றது. “ஓதுவீராக” என்றது அவ்வுருவம். 

எனக்கு ஓதத் தெரியாதே!” என்றார் முஹம்மது. அந்த உருவம் அவரை கட்டி அணைத்தது. “ஓதுவீராக” என சற்று உரத்தக் குரலில் பேசியது. “நான் ஒதீனவன் அல்லனே” என்றார் அப்பாவியாக முஹம்மது. 

அப்போது அவரது உடம்பில் வியர்வை துளிகள் நிறைய வழிந்தோடின. மறுபடியும் அந்த உருவம் அவரை கட்டியணைத்த பின், “ஓதுவீராக” என்று முன்பை விட அதிக உரத்த குரலில் பேசியது. 

”நான் எதை ஓதுவது?’‘ என்று வினவினார் முஹம்மது. மூன்றாவது முறையாக மறுபடியும் இருஉடல் ஒரு உடல் ஆவது போல் இறுக காற்று புகாத அளவுக்கு கட்டி அணைத்தது. 

”ஓதுவீராக அனைத்தையும் இரட்சிப்பவனாகிய உம் இறைவனின் திருநாமம் கொண்டு, அவன் மனித இரத்தக் கட்டியினின்றும் உருவாக்கினான் ஓதுவீராக,உமதுஇறைவன் உன்னதமானவன், 

எழுது கோலினால் அறிவை விரிவாக்கியவன், மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு அறிவித்து தந்தவன்’ என்று ஐந்து திருவாசங்களை ஓதிக் காட்டியது. 

நபிகளிடத்தில் தேவன் தோன்றினார்

 nabikal nayagathin history in tamilஅவ்வுருவம் வேறு யாருமல்ல வானவர் ஜீப்ரயீல் அவர்கள் முஹம்மது பெருமானார்க்கு இறைவேதம் அருளியது. பின்பு அவ்வுருவமும் ஒளியும் ஒலியும் குறைந்து மறைந்தது. 

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராக, நபிமார்களின் முத்திரையாக முடி சூடப் பெற்றார். நீபிகள் பெருமான் எழுதப்படிக்காதவர் இருந்தாலும், இந்த இறையருளால் நிகழ்ந்தது. 

அப்போது அவருக்கு வயது 41. பின்னர் வீடு நோக்கி புறப்பட்டார். கணவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த கதீஜா, வீட்டின் கதவை திறந்தார். ”என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்!” என்று கூறிக்கொண்டு படுக்கையில் போய் படுத்துக் கொண்டார். 

கதீஜா போர்வை கொண்டு போர்த்தியவராக, ”தங்களுக்கு என்ன ஆயிற்று, தாங்கள் எங்கு சென்றீர்கள், நேற்றுத்தானே ஹிராவுக்கு ஆள் அனுப்பி தங்களை பார்த்து வரச் சொன்னேன். 

அவர்கள் தேடி அலைந்து பார்த்து விட்டு தங்களை காணவில்ல என வந்து சொன்னார்கள். தாங்கள் ஏன்

 இவ்வாறாக மாறுதலடைந்து இருக்கிறீர்கள்?” என்றார் அம்மையார். மேலும் தொடர்ந்து, “தங்களுடைய திருவதனம் (உடல்) இதற்கு முன் என்றுமில்லா ஜோதியை வீசி நிற்பதையும் தங்களின் திருமேனி நான் முகர்ந்தறியா நறுமணத்தை நான் காண்கிறேன். 

என்ன நடந்தது?” என்று தன் அன்பாக கணவரிடம் கேட்டார். நடந்ததை முழு விவரத்துடன் சொன்னார். ஐந்து திருவசனங்களை ஒப்பித்தார் முஹம்மது நபி அவர்கள். 

கதீஜா அவர்கள் உடல் மெய் சிலிர்த்து போனது. அதே சமயத்தில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உடனே தன் பெரிய தந்தையின் மகனான வரகா என்பவரை நோக்கி ஓடி, நடந்த விஷயத்தை தெளிவுப் படுத்தினார். 

வரகா யூத, கிறிஸ்து வேதங்களை நன்கு தெரிந்தவர். உருவ வழிபாட்டில் ஈடுபடாதவர். எனவே தன் அண்ணனிடம் கதீஜா அம்மையார் கூறினார். 

வரகாவும் ”உலக மாந்தர் இதுவரை எதிர்பார்த்திருந்த உலக மாநபி உம் கணவர் முஹம்மதுவே ஆவார். 

விரைவில் வீடு சென்று அவரைக் கண்ணினை இமை காப்பாது போல் காத்து வருவாய்” என்று சொல்லி அனுப்பினார் வரகா.பிறகு வரகா முஹம்மதுவை சந்தித்தார். “உம்மை இறைவன் தன் இறுதி நபியாக நியமித்துள்ளான்.

மக்கள் உம்மை பொய்யென்றும், பைத்தியக்காரரென்றும்,சூனியக்காரரென்றும் பழித்துரைப்பர். விரோதம் பாராட்டுவர். தாங்கொண்ணாத துன்பம் விளைவிப்பர். நீர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்” என்று கூறி விட்டு நெற்றியில் முத்தமிட்டு ஆசி கூறி அனுப்பினார் வரகா.

புதிய மார்க்கம்

nabigal nayagam history in tamil சில நாட்கள் சென்றன. நபிகள் அவர்களுக்கு வஹீ (அருள்) வந்த கொண்டிருப்பதும், அவர்கள் புதிய மார்க்கம் மக்களிடையே போதித்து வருகிறார்கள் என்பதும் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு மத்தியில் பரவியது. 

அப்துல் கஃபா என்ற ஜவுளி வியாபாரி ஒருவர் செல்வ வளத்துடனும், புகழுடனும் காணப்பட்டார். 

அவர் மக்கா வழியாக வந்து கொண்டிருந்தார். அவர் குறைஷிகள் சிலரை அவரை சந்தித்து, மக்காவில் முஹம்மதுவின் செயலை பற்றி விசாரிக்கலானார். 

அதற்கு அவர்கள் முஹம்மது நபியை தமக்கு வேதம் இறங்குவதாகவும் கூறிக் கொண்டு புதிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்து வருவதாகவும், உருவ வழிபாட்டு பழித்துரைப்பதாகவும் கூறினார்கள். 

முஹம்மது நபியை தகாத வார்த்தைகள் வழிமொழிந்தனர் குறைஷிகள். அப்துல் கஃபா அமைதியாக “அல்-அமீன் என்ற அழைக்கப்படுகின்றமுஹம்மது அவர்கள் கூறினால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். 

அதுபற்றி சந்தேகிக்கத் தேவையில்லை” என்று கூறி விட்டு அண்ணலாரை (நபியை) கண்டார். 

அவர் கூறிய இறை வசனங்களை செவியுற கேட்டு இஸ்லாத்தின் அணியில் இணைந்தார். பின்பு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். நல்ல குணம் உடைய அவர் இஸ்லாத்திற்கு முதுகெலும்பாய் அமைந்தார்.

நபிகளின் பிரச்சாரம் – nabigal nayagam history in tamil

முஹம்மது நபி அவர்கள் அருள் பெற்று மூன்று வருடங்கள் ஆன நிலையில் இஸ்லாம் மார்க்கம் இரகசியமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. மக்கா எங்கும் புதிய மதம் பற்றிய பேச்சு மக்களிடையே பரவி வந்தது. 

நபி அவர்கள் நான்காம் வருட தொடக்கத்தின் போது ஜிப்ரில் மூலம் இறைவனின் உத்தரவு வந்தது. இப்போது இஸ்லாத்தை பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யுமாறும், காலதாமதம் செய்து கொண்டிருந்தால் தண்டனைக்குள்ளாகுமாறு நேரும். 

இறை வேதத்தை முழுமையாக புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆதலால் மக்களிடையே கூற வேண்டும் என்று விரும்பினார். 

உடனே நபிகள் நாயகம், ஸபா குன்றின் மீது ஏறி நின்று சப்தமிட்டு மக்களை அழைத்தார். எல்லா மக்களும் அங்கு வந்து கூடினர். “நான் சொல்வதை கேட்பீர்களா?’ என்றார். 

“அல்அமீன் ஆகிய நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என நாங்கள் அறிவோம்” என்றனர் மக்கள். “அவ்வாறாயின் நான் சொல்வதை கேளுங்கள்… 

நீங்கள் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டுமெனவும், அவனுக்கு இணை, துணை, கற்பித்து விக்கிரங்களை வணங்கக் கூடாதெனவும், 

உருவமில்லா இறைவனை வணங்கி வந்தால் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள். எனவே உங்களை எச்சரிக்கை செய்யுமாறு அக்கருணையாளன் எனக்கு உத்தரவிட்டுள்ளான்” என்றார் நபிகள் நாயகம்.

மேலும் தொடர்ந்து, ”அவ்வாறால்லாது எனது வார்த்தைகளைப் புறக்கணித்து உங்களின் பழைய மூடக் கொள்கையின் வழியிலேயே இனியும் செய்து கொண்டிருப்பீர்களானால் 

நிச்சயமாக நீங்கள் இன்னல், இடையூறுகளுக்கும் பெரிய இழப்புக்கும் உள்ளாவீர்கள். ஆகவேதான், நான் உங்களை அழைத்தேன். இதை கூறியவுடன் மக்கா நகர மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

உத்தமனான திரு நபி அவர்களுக்கு ஊக்கமளிப்போர் அப்போது அங்கே யாருமில்லை. அதற்கு பதிலாக தங்களது கடவுளை அவர் அவமதிப்பதாகவே கருதினார்கள். 

இதன் விளைவு மிகப் பெரும்பாலான மக்களின் வெறுப்பக்கு உள்ளானார் நபிகள். சொற்பமான சிலர் முஹம்மது நபியை நம்பினர். அவருக்கு பக்க பலமாக நின்றார்கள். 

அவர்களின் துணை கொண்டு இறைவேதத்தை பரப்பி வந்தார். முச்சந்திகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும், சந்தை, திருவிழா ஆகிய நடக்குமிடங்களிலும் தம் பிரச்சாரப் பணியை உத்வேகத்துடன் செய்யத் துவங்கி விட்டார்கள். 

எகநாயனாகிய இறைவன் ஒருவனே. அவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது. இது இறைவனின் வார்த்தைகள் ஆகும். அவனுடைய அளப்பரிய அருட்கொடைகளை எடுத்து விளக்கியும், விக்கிரக வணக்கத்தைக் கைவிடுமாறும் கூறி வந்தார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் தெருவில் நடந்து செல்லும்போதும் வசைபாடுவதும், கேலி, நையாண்டி செய்வதும், பைத்தியம், சூனியக்காரர், மாயாவி என்று தூற்றுவதும், குறைஷிகளின் அன்றாடக் கடமையாகி விட்டது. 

திருத்தூதரான நபிகளுக்கு இழைக்கப்படும் இன்னல்களை கண்டு மனந்தாளாமல் அபூதாலிப், இனி எவரும் தம் தம்பி மகனுக்கு இன்னல் விளைவிப்பின் 

தம் குடும்பத்தார் அனைவரும் ஒன்றுபட்டு உயர்தியாகம் செய்தாகிலும் குடும்ப கவுரத்தை காக்க நேருமென எச்சரித்தார். அதனைக் கேட்ட குறைஷிகள் தங்கள் கொடுமைகளை சற்று தளர்த்திக் கொண்டனர். 

கதீஜா அம்மையார் மரணம்

நபிகள் அவர்கள் அருள் பெற்ற பத்தாவது வருடத்தின் போது, முதுமை அடைந்து விட்ட அபூதாலிப் மீளா நோயுற்றார். தமக்கு மரணம் நெருங்கி விட்டதை அறிந்தார். 

தம் குடும்பத்தினரை அழைத்தார். அப்போது அண்ணல் நபிகள் உடன் இருந்தார். “மரணம் என்னை நெருங்கி விட்டது. நீங்கள் அனைவரம் முஹம்மதுவிடம் அன்போடு நடந்துக் கொள்ளுங்கள். 

அவர் நம் குடும்பத்தில் கண்ணியமிக்கவர், நேர்மையானவர், அவர் கொண்டு வந்துள்ள மார்க்கத்தை நல்லறிவும், நல்ல எண்ணமும் கொண்ட யாரும் நிராகரிக்க மாட்டார்.” என்றார். 

அபூதாலிப் இறந்த போது அவருக்கு வயது85. அண்ணல் நபி அவர்களுக்கு வயது 50. இதற்கிடையில் அபூதாலிப் மரணமாகி 35 நாட்கள் முடிவடைவதற்குள் நபிகள் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. 

அவரது அன்பு மனைவியான கதீஜா இறந்து போனார். இதனால் நபி அவர்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்தார். 

கதீஜா அம்மையார் வயது அப்போது 65 ஆகும். இந்த நிலையில் தெரு வழியாக நடந்து வரும் போது நபிகள் எதிரில் தென்பட்ட ஒரு மனிதன் திடீரென அவரது தலையில் மண்ணை கொட்டினான். 

அண்ணல் நபி அவர்கள் அமைதியாக காணப்பட்டார். வீடு நோக்கி வந்தார். அப்போது அவரது மகள் பாத்திமா இதை கண்டதும், ‘ஓ’வென வாய் விட்டு அழுதாள்.

“தந்தையே தாங்கள் எவருக்கும் எப்போதும் யாதோர் தீங்கு செய்ததில்லையே ஏன் இந்த நிலைமை நமக்கு. 

இதுவா நமக்கிட்ட கதி?” என்றாள். 

”மகளே, அழாதே 

என் கண்மணியே, உன் தந்தையை ஆண்டவன் ஒருகாலும் கைவிட மாட்டான். அவன் எப்போதும் பாதுகாப்பளிப்பான். தைரியமாகஇரு.”

யத்ரிப் சென்ற நபி –  nabikal nayagathin history in tamil

நபி பெருமானாரின் பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே இருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 

இதைக் கண்ட குறைஷிகளும், பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அரபி களுக்கு மட்டுமின்றி யூதர், கிறிஸ்தவர்களிடத்தும் சென்று இறைவனின் பெருமை எடுத்து சொல்ல நபிகள் தயங்கவில்லை. 

தவறவும் இல்லை. இதனால் நபிகள் அவர்களை கொல்ல தயங்க வில்லை எதிர்தரப்பினர். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடு வாசல் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு மதினா என்னும் நகர் நோக்கி பயணத்தை மேற் கொண்டார். 

அவ்வாறு மேற் கொள்ளும் வேளையில் ஏற்கனவே யத்ரிப் நகர மக்கள் இவரை பற்றி அறிந்திருந்தனர். இதனால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவர் களாக நபியின் வருகைக்காக ஆவலுடன் காத்து நின்றனர்.

நபிகளும், அவருடைய குழுக்களும் யத்ரிப்பு அடைந்த போது, பட்டணத்தின் பிரதான வாயிலில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அனைத்து வகுப்பினரும் கூடி நின்று ஆரவாரத்துடன் பாட்டுப் பாடி ஆனந்தத்தோடு வரவேற்றனர். 

அதனைக் கண்ட நபிகள் உள்ளம் நெகிழ்ந்து இறைவனைப் போற்றி புன்முறுவல் பூத்தார். 

நபிகள் அவர்கள் தங்கள் ஊரில் வந்து குடியேறியதில் யத்ரிப் நகர மக்கள் அன்று முதல் தங்கள் ஊரின் பெயரை நபிகளார் பட்டணம் என்று சிறப்புடன் அழைத்தனர். பின் நாளடைவில் மதீனா என அழைக்கப்படலாயிற்று. 

மதீனா

 nabikal nayagathin history in tamil நபிகள் தன்னுடைய இஸ்லாம் மார்க்கத்தை பள்ளி வாசல் மூலம் நிர்ணயமாக்கி, தன் வலுவான அஸ்திவாரத்தை நாட்டினார். பின்பு அங்கு இஸ்ஸாம் மதம் தழைக்க தொடங்கியது. 

நபிகள் நாயகம் (ஸல்) தமது 63-வயதில் மரணிக்கும் பொழுது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பை கொண்டதாக இருந்தது அவரது ஆட்சி நிலப்பரப்பு. 

ஒரு அகண்ட ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு நபிகள் நாயகத்திற்கு வெறும் பத்து ஆண்டுகள்தான் தேவைப்பட்டது. அதுவும் மக்களின் மனதை வென்றெடுத்த அன்பு ராஜ்ஜியம். 

இஸ்லாம் என்ற மார்க்கம் உலகளாவிய அளவில் கொண்டு போவதற்கு அண்ணலாரின் ஆன்மீக உயர்பண்பு இறை கட்டளையை செயல்படுத்தய பாங்கு. 

அனைவரையும் அரவணைக்கும் சகோதர மனப்பான்மை பிரித்து பார்க்கும் மனப்பான்மை 

அவர்களின் வாழ்வில் இருந்ததாக என்றுமே சான்று கிடையாது. எங்கும் தூய்மை, எதிலும் நேர்மை இதுதான் நபிகள் நாயகத்தின் அரசாட்சி. அரசாட்சியில் துளியும் தவறில்லாமல் பார்த்துக் கொண்டார். 

நபிகள் நாயகத்தின் எளிமை – nabikal nayagathin history in tamil

நபிகள் நாயகம் அவர்கள் பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் பாயின் ஓரம் அதன் மேடு பள்ளம் முதுகில் பதிந்து விடும். இதை சுட்டி காட்டி வேறு விரிப்பை தருகிறோம் என்றார்கள். 

அதை மறுத்த நாயகம், “மரத்துக்கும், அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பயணிக்கும் என்ன உறவோ அதுபோல எனக்கும் இந்த உலகத்துக்கும் ஆன உறவு.” என்றார். 

ஒரு மாமன்னர் எப்படி எல்லாம் வாழலாம் என்று கட்டுப்படுத்தப்படாத ஒரு மறைமுக விதி உள்ளது. இவையனைத்தையும் உடைத்தெரிந்து ஒரு வேட்டி, 

ஒரு கம்பிளி போர்வை இதையே தன் உடையாக வாழ்ந்து வந்தார். இதலிலிருந்து புரிந்து கொள்ளலாம். இஸ்லாம் என்ற இனிய மார்க்கம் என்றுமே ஆடம்பரத்தை ஆதரித்தது கிடையாது. 

இதற்கு சான்றாக அவரேவாழ்ந்தார் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர் நினைத்திருந்தால் தன் ஆன்மீக சக்திகளை பயன்படுத்தி, கணக்கிடலடங்காத செல்வத்தை பெற்றிருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுதான் நபிகள் நாயகம்.

தாயின் பாசம் அறியாதவர்

தாய் பாசத்தை சிறு வயதிலேயே இழந்தவர். இருப்பினும் சிறிய தாயார் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு முழு பணி விடை செய்தார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் சொல்வதற்கு முன்பே வாழ்ந்து காட்டியதால்தான், இன்றும் உலகில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் வெள்ளிக்கிழமை அன்று ஜிம்ஆ சிறப்பு தொழுகையின் போது நாயகத்தின் அருமை பெருமைகளை நினைவு கூறாமல் பிரசங்கம் முடியாது. 

புகழுக்கு ஆசைப்படாதவர் நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்கவில்லை, பதவியினால் கிடைக்கும் சுகபோக வாழ்க்கையும் வாழவில்லை. 

ஆன்மீக தலைமை, ஆட்சி தலைமை ஆகிய இரண்டிலும் எதிலும் தமது தனிப்பட்ட புகழுக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு முறை நபிகள் நாயகம் அவர்கள் தெருவில் நடந்து சென்றார். 

அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது ஸகாத் வகையைப் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன் என்று கூறினார்கள். 

கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து சாப்பிடுவதில் ஏழைக்களுக்கான அரசின் கருவூலத்தை சேர்ந்தவராக இருக்குமோ என்பதை தவிர வேறு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

நபிகள் நாயகத்தை பொறுத்தவரை அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவம் தனக்கு சாதகமானதா, பாதகமானதா என்று பிரித்து பார்க்க மாட்டார். 

மற்றொரு சம்பவமான இதை பார்ப்போம். நபிகள் நாயகத்திடம் ஒரு ஒட்டகம் இருந்தது. இந்நிலையில் அவரைக் காண வந்தவர் ஒருவர் ஒரு ஒட்டகத்தை அழைத்து வந்தார். 

அதை நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துடன் போட்டிக்கு அழைத்தார். போட்டியில் நம் ஒட்டகம் தோற்குமா? ஜெயிக்குமா என்பதை பற்றி சிறிதும் கவலைப்பட வில்லை நபிகள். 

“போட்டி நடத்துங்கள்” என்றார். போட்டியில் நபிகள் நாயகம் அவர்களின் ஒட்டகம் தோல்வியை தழுவியது. சிறிதும் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் நபிகள் நாயகம் அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார். 

“தனது ஒட்டகம் தோற்றது சரியே” என்கிறார். திறமையுள்ள அந்த இளைஞனின் ஒட்டகத்தை மதிப்பளித்து மட்டும் நபிகள் நாயகம் அவர்கள் அப்படி பேச வில்லை. 

உயருகின்ற பொருள்கள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் தாழ்ந்தும் போகும் என்பது அதன் அர்த்தம் ஆகும். 

சுற்றி உள்ள மக்கள் கூட்டம் நபிகள் நாயகத்தின் ஒட்டகம் தோற்றுவிட்டதே என்ற வருத்தத்தில் இருந்ததால் அவர் இதை சொன்னார்.

இறுதி பயணம்

nabikal nayagathin history in tamil இறுதி நாள் நெருங்கி வருவதை நபிகள் நாயகம் அவர்கள் அறிந்தார்கள். அதை எப்படி அறிவித்தார்கள் என்பதை சொல்லாமல் அவரைப் பற்றி இந்த புத்தகம் நிறைவு பெறாதே என்றே கருதுகிறேன். 

தம்மை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்த இறைவனின் திருத்தூதை ஒருவாறு நிறைவேற்றி விட்டோம். இஸ்லாம் வேரூன்றி விட்டது என்ற எண்ணம் உலக நபிகள் நாயகம் அவர்களுக்கு தோன்றியது. 

பத்து ஆண்டுகளில் இஸ்லாம், ஹிஜாஸ், பகுதியைத் தாண்டி ஒரு பக்கம் யமன், பஹ்ரைன், யமாமா, பராசீக எல்லை வரையிலும் மறுபக்கம் இராக், ஷாம், ஹல்ரமௌத் வரையிலும் பரவி நின்றது. 

தன் இறுதி காலக் கட்டத்திற்குள் ஹஜ்ஜை நிறைவேற்றி இறுதி வடிவம் கொடுத்து வருவதெனத் தீர்மானித்தார்கள். 

நோவினை செய்திருந்தாலும், அவற்றை இப்போதே திரும்பப் பெற்றுக் கொள்ளக் கடவீர். 

மறுமையிலும் இறைவனின் முன்னிலையில் தலை குனிந்தவனாக நிற்பதை விட உங்கள் முன் தலை குனிவது எவ்வளவோ மேலானது” என்றார் உத்தமர் நபிகள் நாயகம் அவர்கள். 

அக்கூட்டத்திலிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “பெருமானார் ஒருச்சமயம் ஓர் ஏழைக்கு மூன்று திர்ஹங்கள் கொடுக்கச் சொன்னதாகவும், அவை தமக்குத் திரும்பக் கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்தார். 

உடனே அப்பணத்தை தங்களின் சிறிய தந்தை ஹலரத் அப்பாஸ் அவர்களின் மகனான பலுல் இடம் சொல்லி கொடுத்து விடுமாறு பணித்தார் நபிகள் நாயகம். 

மற்றொருவர் எழுந்து, தனது வெற்றுடம்பில் பெருமானார் சமயம் விரல் கொண்டு தட்டியதாகவும், அவ்விதம் தாமும் செய்ய விரும்புவதாகவும் சொன்னார். 

மக்கள் முன்னிலையில் தங்கள் திருமேனியை திறந்து காண்பிக்கச் கூச்சமுற்ற சத்தியவானான நபிகள் அவர்கள், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, 

தன் அங்கியை அகற்றி அங்கத்தைத் திறந்து காட்டி அவரின் ஆசையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறினார். 

அம்மனிதர் நபிகள் முதுகிலிருந்து நபித்துவ முத்திரை – இலாஞ்சனையை கண்ணில் பட்டதும், அதை முத்தமிட்டவராய், நபிகள் அவர்களின் பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கி,

இறைவனின் தூதுவரே, என்னை மன்னித்து அருளுங்கள். தங்கள் திருமேனியிலுள்ள இந்த இலாஞ்சனையை என் பாவக் கண்களால் கண்டு விமோசனம் பெற எண்ணியே இவ்வழியை கையாண்டேன்.

நபிகளின் அடையாளம் 

எம்பெருமான் நபிகள் நாயகத்தின் முதுகில் இரு தோள் பட்டைகளுக்கும் நடுவே, முதுகுத் தண்டை விட்டு, வலது பக்கம் சற்று ஒதுங்கியதாக, புறா முட்டை வடிவில் சிறிய மேடாக சுற்றிலும், 

உரோமங்களை யுடையதாய், பொன் நிறமானதொரு முத்திரையை தோற்றுவித்திருந்தான். இதனையே அந்த மனிதர் அடையாளங் கண்டு முத்தமிட்டார். 

நபிகள் அவர்கள் புன்முறுவல் பூத்து, “நல்லது நீங்கள் செல்வீர். நரகத்தின் வாயில்கள் உமக்கு மூடப் பட்டு விட்டன” என்றார் நபிகள் நாயகம். 

இதை வேறுவிதமாக சொல்கிறார்கள் வரலாற்று நூலாசிரியர்கள். ஒரு நாள் மதினா நகரில் பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் தனது தோழர்கள் மத்தியில், 

”கருணை இறைவன் சொல் கேட்டு கடமை செய்ததில் ஏதும் குறை உள்ளதா, நான் தவறிழைத்து விட்டேனோ” என்று வெளிப்படையாக கேட்டார்கள் நபிகள் நாயகம். ”யாருக்கும் தவறுகள் நான் செய்திருந்தாலும், எவருக்கும் துன்பம் தந்திருந்தாலும் தயங்காது அதனை என்றார் நபிகள் நாயகம்.

முக்காலு, ” இங்கு சாட்டை இல்லையே” என்றார். நபிகள் நாயகம் அவர்கள், ”தங்கள் வீட்டில் இருக்கும் சாட்டை எடுத்து வரச் சொல்லுங்கள்.

அப்போதுதான் தண்டனை நிறைவேறும்” என்று தோழர் பிலாவை பார்த்து சாட்டையை எடுத்து வரச் சொன்னார்கள் நபிகள் நாயகம். கண்ணீரோடு, கருணை நபியின் இல்லத்துக்கு விரைந்தார் பிலால்.

அங்கு கண்ணியத்துக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகள் பாத்திமா நாயகம். என்ன என்று விசாரித்தார்கள் நடந்ததை ஒன்று விடாமல் பிலால் கூறினார். “என் தந்தையின் உடல் நலம் சரியில்லை” என்று கண்ணீரோடு கூறிய பாத்திமா நாயகம்.

தானே அந்த அடியைப் வாங்குவதாக கூறினாள். பெருமை மிகுந்த தனது பாட்டனருக்கு இந்த கதியா என்று நபிகள் நாயகம் அவர்களின் பேரன்கள் அசேன், உசேன் இருவரும் அழுது துடித்தார்கள்.

“தனது தாயார் கூறியது போலவே தண்டனையைப் நாங்கள் பெறுகிறோம்” என்றார்கள். கண்ணீரோடு சாட்டையைப் பெற்றுக் கொண்ட பிலால் நபிகள் நாயகத்திடம் அதை கொடுத்தார். “முக்காலு இந்தாருங்கள்.

தண்டனையைப் நிறைவேற்றுங்கள்” என்று சாட்டையை அவர் கையில் கொடுத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) கொஞ்சமும் பயமில்லாமல் முக்காலு அந்த சாட்டையை பிடித்தார்.

நபிகளுக்கு நடந்த அதிசயம் 

தாங்கள் என்னை அடிக்கும் போது சட்டை ல்லாமல் நான் இருந்தேன்” என்றார் முக்காலு. இதை கூறியதும், நபி அவர்கள் தயங்காமல் சட்டையைக் கழற்றினார்கள். 

சட்டை கழற்றியவுடன் சாட்டையை தூக்கி எறிந்து விட்டு, நபிகள் நாயகத்தின் முதுகில் முத்திமிட்டார். ஏனென்றால் அவர்களின் முதுகில் பிறையிருந்தது. முக்காலுவின் ஆசை நிறைவேறியது. 

நபிகள் நாயகத்தை துன்புறுத்தவோ, தண்டனை தரவோ முக்காலு நினைக்கவில்லை. தான் அவர்களின் முதுகில் முத்தமிட முடியுமா என்பது கூட அவருக்கு தெரியாது.

நடந்த உண்மையை அவர் மனதில் கூறியதால் அவரின் ஆசையை அவர் மனதில் இருப்பதை உணர்ந்த நபிகள் நாயகம் அதை நிறைவேற்ற அனுமதி தந்தார். 

வீட்டிற்கு வந்த நபிகள் நாயகம் மேலும் களைப்புற்று காணப்பட்டார். அவருடைய திருமேனி நொடிக்கு நொடி கனத்துக் கொண்டு வருவதை அறிந்தார். அவரது உடல் சில்லிட்டுக் கொண்டும் வந்தது. 

அவரை கீழே கிடத்தி தலையணை மீது படுக்க வைத்தார்கள் அவரது ஆதரவாளர்கள். “கால்கள் நீட்டியவாறு, தொழுகையை நியமமாக நிறைவேற்றுங்கள். 

அடிமைகளை அன்பாய் நடத்துங்கள். பெண்கள் கண்ணியத்துடன் நடத்துங்கள்” என மொழிந்தார் நபிகள் நாயகம். 

அல்லா ஹும்ம ரஃபீக்குல் அல்லா, அல்லாஹ்வாகிய மேலான தோழனிடம் என்ற வார்த்தைகள் இறுதியாக மூன்று முறை அவர் உச்சரித்தார். பிறகு அவர்களின் தேஜோமயானந்தமான ஆன்மா தம் மேலோனின் திருச்சந்நிதானம் மீண்டது.

நபிகளின் இறுதி தருணம் 

ஆம்! மாமனிதர் நபிகள் பெருமனார் உயிர் துறந்தார். 

இருமூன்றில் தாய் இழந்தநபி 

இருபத்தைந்தில் மணந்தநபி 

அருநாற்பதிலே நிறைந்த நபி 

அறுபான் மூன்றில் மறைந்தநபி 

என பேராசிரியர் கா.அப்துல் கபூர் பாடியுள்ளார். 

நபிகள் நாயகம் காலமாகி விட்டார்கள் என்ற செய்தி நொடிப்பொழுதில் மதீனா எங்கும் பரவிவிட்டது. ஹலரத் அபூபக்கர் அவர்கள் நாயகத் திருமேனியை நல்லடக்கம் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. 

அதன் பின் மக்கள் இறுதி மரியாதை செலுத்தும் பொருட்டுத் திருமேனியின் வரிசைக் கிரமமாக வந்து தரிசித்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆண்கள் முன்னதாகவும், பெண்கள் பின்னதாகவும் வரிசையாகச் சென்று தரிசிக்க வழி செய்யப்பட்டது. 

திருமேனியைக் அவர் வாழ்ந்த வீட்டில் கப்ரி மக்காவில் இறக்க வேண்டிய தருணத்தில் கப்ரு ஈரடிப்பாக இருந்ததால், பெருமானாரின் படுக்கையை அதில் விரித்து ஹலரத் அலீ, பலூல், உஸாமா, அப்துர் ரஹ்மான் ஆகிய 

நால்வரும் திருமேனியை தாங்கிப் பிடித்துக் கபருக்குள் வைத்து ஹிஜ்ரி 11, ரபீயுல் அவ்வல் பிறை 14 (கி.பி.632, ஜுன் 9) செவ்வாய் பின்னேரம் புதன் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். பல எதிர்ப்புகள், பலவிதமான அன்றாட வாழ்க்கை சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இருந்தாலும் நீதிநெறியோடு வாழ்ந்தார் நபிகள் நாயகம் எனவே அவரைப் பின்பற்றி நாமும் வாழ்வோமாக!.

Comments

Popular posts from this blog

இயற்கை வைத்தியம்: வீட்டிலேயே சளி, இருமல் குணமாகும் 5 சிறந்த நாட்டு மருந்துகள்"

Mahathi alai is coming soon

Alovera benefits