Mahathi alai is coming soon
#உலகில்_அட்டூழியங்கள்_பெருகிய_காலத்தில் மஹ்தி_அலைஹிஸ்ஸலாம்_வருவார். இன்ஷா அல்லாஹ் மக்கள். மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272) மேலுள்ள ஹதீதின் பிரகாரம், மஹ்தி (அலை) அவர்கள் வரக்கூடிய சூழல், கொடுமையான ஓர் சூழலாகும். இன்றைய காலகட்டத்தை நாம் எடுத்து நோக்குகின்ற பொழுது எங்கு பார்த்தாலும் அநியாயமும் அக்கிரமமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் சொல்லொணா சோதனைகளை உலகெங்கும் அனுபவிக்கின்றார்கள். துனிசியாவில், சிரியாவில், எகிப்தில், பர்மாவில் ஏன் இலங்கையில் கூட இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சோதனைகள். இப்படி பூமியெங்கும் “பித்னா” உள்ள ஓர் காலகட்டத்தில்தான் இமாம் மஹ்தி (அலை) வெளிப்படுவார். மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்படக்கூடிய கால கட்டம், உலகிலே, மிக மோசமான காலமாக அமைந்திருக்கும். அ...